புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் 9 மாணவர்கள் சித்தி........
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்த மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவர்களான மகேஸ்வரன் ஜிவேந்தன் (182), தேவேந்திரன் ரிவானுஜா (178), சுதாகரன் கோஷயன் (164), சந்திரகுமார் புவிலோஜன் (164), விநாயகலிங்கம் பதுநிதுர்சினி (159), றோகிலன் ஹரிஸ் (151), துரைலிங்கம் நிஷப்தவி (148), தர்சன் மிதுர்ஷா (147), ரதிகுமார் நியோமிகா (146) ஆகிய மாணவர்களே வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையை அடைய வழிப்படுத்திய அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment