மட்டு மண்ணிற்கு பெருமை: 22 ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் வெண்கல பதக்கத்தை தன்வசமாக்கிய மட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஜெயக்குமார்....
மட்டு மண்ணிற்கு பெருமை: 22 ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் வெண்கல பதக்கத்தை தன்வசமாக்கிய மட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஜெயக்குமார்....
தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 22 ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் விளையாட்டு பயிற்றுநராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடைமையாற்றும் ப.ஜெயக்குமார் அவர்கள் 56- 59 வயது பிரிவில் கோலூன்றி பாய்தல் (Polevault) போட்டியில் பங்கு பற்றி 2.30 மீட்டர் உயரத்தை தாண்டி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்.
இருந்த போதிலும் இவர் இவ்விளையாட்டு நிகழ்வில் 100 மீட்டர் மற்றும் நீளம்பாய்தல் போட்டிகளிலும் பங்கு பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் தனது இளமைக் காலத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகச் சிறந்த ஒரு தடகள வீரராக திகழ்ந்து பல சாதனைகளை இலங்கையில் படைத்துள்ளத குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ் வெற்றியினுடாக சர்வதேச பதக்கத்தினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுத்தந்த ப.ஜெயக்குமார் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment