மட்டக்களப்பில் தேசிய பாடசாலைக்களுக்கிடையில் விவாதப்போட்டி - 2023

 மட்டக்களப்பில் தேசிய பாடசாலைக்களுக்கிடையில் விவாதப்போட்டி - 2023

மட்டக்களப்பு தேர்தல் திணைக்களம் மட்டக்களப்பில் உள்ள தேசிய பாடசாலை மாணவர்களிற்கிடையே மாவட்ட மட்ட விவாதப் போட்டியினை நடாத்தியிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் எம்.வீ.எம்.சுபியான் அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையில் இடம்பெற்ற விவாதப் போட்டியில் 14 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியதுடன், இதில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிசிலியா தேசிய பெண்கள் கல்லூரியின் விவாத அணியினர் வெற்றி பெற்றதுடன், இப்போட்டியானது தேர்தல் மற்றும் ஜனநாயகம் போன்ற கருப்பொருட்களை மையமாக கொண்டு இடம்பெற்றிருந்தது.
இப்போட்டி நிகழ்வில் நடுவர்களாக கதிரவன் த.இன்பராசா உள்ளிட்ட நடுவர்கள் குழாத்தினர் சிறப்பான முறையில் நடுவணம் புரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Comments