வாழைச்சேனையில் உலக சிறுவர் தினம் - 2023

 வாழைச்சேனையில் உலக சிறுவர் தினம் - 2023

“எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக உலக சிறுவர் தின நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு அதிதிகளாக வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.மதன் வாழைச்சேனை நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார, வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.நவநீதன், வாழைச்சேனை நன்நடத்தை பொறுப்பதிகாரி எம்.எம்.அப்துல் றவுப், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், நிருவாக உத்தியோகத்தர் புனிதநாயகி ஜெயக்குமார், சமுர்த்தி தலைமை முகாமையாளர் க.தேவமனோகரி, வாழைச்சேனை இலங்கை வங்கி முகாமையாளர் ஆர்.பிரேம்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் உலக தரிசனம் வாழைச்சேனை, ஹானியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகர் வாழைச்சேனை, செரி நிறுவனம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கோறளைப்பற்று வாழைச்சேனை அலுவலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் பேச்சு, கவிதை, குழுநடனம், வீதி நாடகம் என்பன இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
மாவட்ட ரீதியில் வெற்றியீட்டிய வளர்நிலா சிறுவர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உபகரணங்களும், சான்றிதழ்களும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Comments