கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு Fr.யூஜின் ஹேர்பட் ஞாபகார்த்தமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு..

கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு Fr.யூஜின் ஹேர்பட் ஞாபகார்த்தமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களில் கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில், மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப்வாஸ் சபையினர் கல்விக்கான ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விளையாட்டு துறையினை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் இன்று (18) வழங்கப்பட்டன.

குறித்த விளையாட்டு உபகரணங்கள் புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்தின் தந்தை என அழைக்கப்படும், அமரத்துவம் அடைந்த அருட்தந்தை யூஜின் ஹேர்பட் அடிகளாரின் 100வது பிறந்த தின ஞாபகார்த்தமாக, அடிகளாரின் குடும்ப உறவினர்களான மில்டன் ரெஜி குடும்பத்தினரின் நிதி அன்பளிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் லோகநாதன் விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர் செல்லப்பு உதயகுமார், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பாலசந்திரன் சௌமியா, புனித ஜோசெப்வாஸ் சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments