கிரான் மத்திய கல்லூரியில், கல்லூரி தினத்தை முன்னிட்டு இரத்தானம்......
மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 78 ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு, இரத்தானமுகாம் நடாத்தப்பட்டது.
பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில், 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு இடம்பெற்றது. கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரியின் எதிர்கால கல்வி அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருமளவான பழைய மாணவர்கள் இரத்ததானம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி பொறுப்பாளர் டொக்டர் க.விவேகானந்தநாதன் மற்றும் கல்லூரி அதிபர் ம.தவராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment