ஏறாவூர் நகர சபை பிரதேசத்திற்கான உத்தேச அபிவிருத்தி வரைபடம் கையளிப்பு......

 ஏறாவூர் நகர சபை பிரதேசத்திற்கான உத்தேச அபிவிருத்தி வரைபடம் கையளிப்பு......

ஏறாவூர் நகர சபை பிரதேசத்திற்கான உத்தேச அபிவிருத்தி வரைபடம் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வரைபடம் தொடர்பாக உள்ளூர் திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் சபை மண்டபத்தில் (21) திகதி இடம்பெற்றது.
ஏறாவூர் நகரசபை பிரதேசம் எதிர்காலத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களால் முன்னளிக்கை வழங்கப்பட்டதுடன், அதன் பிரதி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எல்.ஜே.லியானகேயினால் நகரசபை செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் இதனை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு உள்ளூர் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எம். நாஸர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எப்.றிப்கா, ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.எச்.ஸிஹானா உட்பட உள்ளூர் திணைக்களங்களின் அதிகாரிகள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Comments