கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால், மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் நடமாடும் சேவை.....

 கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால், மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் நடமாடும் சேவை.....

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலின் கீழ், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் நடமாடும்சேவை நடாத்தப்பட்டது.

சமூக சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களம் உட்பட பிரதேச செயலகத்தின் ஊடாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டதுடன் சுகாதார சிகிச்சைகள், கண் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சமூகசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் S.அருள்மொழி உட்பட பலரும் நடமாடும் சேவையில் கலந்துகொண்டனர். களுவாஞ்சிகுடி வைத்தியசாவை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆயுள்வேத வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சேவைகளை வழங்கியதோடு, முதியவர்களுக்கான கொடுப்பனவுகள், முதியோர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments