மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிறுவர் தின நிகழ்வு ......

 மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிறுவர் தின நிகழ்வு ......

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், பிரதேச செயலகத்துடன் சிறுவர் நிதியம் மற்றும் ஏயூ லங்கா நிறுவனமும் இணைந்து சிறுவர் தின நிகழ்வுகளை நடாத்தின.

பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிறுவர்களின் நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் இங்கு வருகை தந்த சுமார் 250 சிறுவர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன.

சிறுவர்களின் உரிமை கோரிக்கை மகஜர் ஒன்றும் இளைஞர் கூட்டணியினால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர், ஏயூ லங்கா நிறுவனத்தின் பிரிவு திட்ட இணைப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments