வெல்லாவெளி கலைமகளில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள்......
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் (4) அதிபர் ஆறுமுகம் புட்கரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பாடசாலையின் EPSI இணைப்பாளரும் கோட்டக் கல்விப்பணிப்பாளருமான த.அருள்ராஜா கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக வெல்லாவெளி இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி ப. ரமேஷ்கரன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக போரதீவுப் பற்று சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ. நவநிதி கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் உரைகளும் இடம் பெற்றன. முதியோர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பரிசுகளை பாடசாலை ஆசிரியர்கள் வழங்கி இருந்தார்கள், அதேபோல் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment