சிறுவர் கழகங்களின் அங்கத்தவர்களுக்கு ஊக்குவிப்பு உதவிகள் வழங்கிவைப்பு.......
பிரதேச சிறுவர் சபை, சிறுவர் கழகங்களை வலுப்படுத்துவதற்காக அவர்களின் கல்வி, விளையாட்டு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் புத்தகப் பை மற்றும் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு (23) திகதி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம்முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் மகளிர் பிரிவு மற்றும் ஏனைய பிரிவு உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி சிறுவர் கழகங்களின் அங்கத்தவர்களுக்கு இவ் ஊக்குவிப்பு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment