ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் கிராமங்கள் தோறும் விழிப்பூட்டல் செயலமர்வு......

 ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் கிராமங்கள் தோறும் விழிப்பூட்டல் செயலமர்வு......

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு 'வீட்டு முகாமைத்துவமும் மகிழ்ச்சியான குடும்பமும்' எனும் கருப்பொருளில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மேற்கொள்ளத் திட்டமிட்ட நிகழ்வுகளில் ஒன்றாக (10) ந்திகதி  காகிதநகர் (210/D) கிராம உத்தியோகத்தர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதான வளவாளராக மீராவோடை எம்.பி.சி.எஸ்.வீதியில் அமைந்துள்ள உம்மு சுலைம் மகளிர் அறபிக்கல்லூரியின் அதிபரும் பிரபல  பேச்சாளருமான மௌலவி ஏ.ஜி.சாதிக் மதனி கலந்து கொண்டு வீட்டு முகாமைத்துவத்திற்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் தொடர்பாக மிகவும் சிறப்பாக விளக்கமளித்தார். 

இந்நிகழ்வில் சுமார் 80க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






Comments