மட்டு வாவியில் தோணி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு......
மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டு வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் 4 பேர் நீந்தி உயிர்தப்பிய சம்பவம் (08) மாலையில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன், மாமாங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர்
மட்டக்களப்பு. தலைமையக பொலிஸ் பிரிவு சீலாமுனை மாமாங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் டிக்ரொக் வீடியோ தரவேற்றம் செய்வதற்காக சம்பவதினமான (08) காலை 11 மணியளவில் சீலாமுனையில் இருந்து தோணியில் வாவியில் பிரயாணித்து நாவலடிக்கு சென்று அங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை ரிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் சீலாமுனைக்கு தோணியில் பிரயாணித்த போது தோணியின் கட்டப்பட குள்ளாதடி இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிந்ததையடுத்து அனைவரும் நீரில் முழ்கினர்.
இதனையடுத்து 4 பேர் நீந்திகரையடைந்ததுடன் இருவர் காணாமல் போயிருந்ததையடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்களை தேடியநிலையில் நாவலடிபகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment