மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வு....
மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச்சங்ககத்தின் வாணி விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் இன்று (23) திகதி மாவட்ட செயலகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகத்தின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற வாணி விழா நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பஜனை, மாணவிகளின் வரவேற்பு நடன ஆற்றுகைகள் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான "கலைவாணி" கல்வி உதவி வழங்கும் நிகழ்வும், நடன மாணவிகளின் குழு மற்றும் தனி நடனங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், அதிதி உரைகள் என்பன இடம்பெற்றிருந்தது.
மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்களினால் வாணி விழா சிறப்பு பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் ராமகிருஸ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் உதவி பொது முகாமையாளர் சுவாமி கரார்ச்சிதானந்தஜீ மஹராஜ் கலந்து கொண்டு ஆன்மீக உரையாற்றியதுடன், வாணி விழா தொடர்பான சிறப்புரையினை வெல்லாவெளி உதவிப் பிரதேச செயலாளர் வீ.துலாஞ்சனன் ஆற்றியிருந்தார்.
அத்தோடு இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.ஜதீஸ்குமார், மாவட்ட செயலகத்தின் கிளைத்தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்துக்களின் மிகப்பிரதான சமய நிகழ்வுகளுள் ஒன்றாக வாணிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment