எல்லே போட்டியில் கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷம் பாடசாலை அணியினர் முதலாமிடம்.......
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட எல்லே போட்டியில் கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷம் பாடசாலை அணியினர் முதலாமிடத்தையும் முனைக்காடு பாடசாலைகள் அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் மூ.உதயகுமாரன் தலைமையிலும் ஒழுங்கமைப்பிலும் வழிப்படுத்தலிலும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளில் காணப்படும் 21 பாடசாலைகளை ஒருங்கிணைத்து சிறந்த திட்டமிடலுடன் மாபெரும் எல்லே சுற்றுப்போட்டியானது மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இவ் எல்லே சுற்றுப்போட்டியில் ஆண் பெண்கள் இணைந்த அணியாக பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவ் எல்லே சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் இறுதி வரை மைதானத்திலிருந்து போட்டிகளை கண்டுகளித்ததுடன் விளையாட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட எல்லே போட்டி நிறைவுபெற்றதும், சம்பியனான அணிக்கும் கோட்ட பாடசாலை அதிபர்கள் இணைந்த அணிக்குமிடையிலான சிறப்பு போட்டியில் வலயக்கல்வி பணிப்பாளரும் இணைந்து கொண்டு அதிபர்கள் அணி சார்பாக விளையாடியது ஏனைய ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. தான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் என்பதையும் விளையாட்டை நேசிக்கின்ற ஒருவர் என்பதையும் அவருடைய செயற்பாடுகள் வெளிப்படுத்தின.
21 பாடசாலைகளை சேர்ந்த 10 அணிகள் பங்கு பற்றிய இந்த தொடரில் இறுதிப்போட்டியில் மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம் மற்றும் மட்/மமே/முனைக்காடு சாரதா வித்தியாலயம் இணைந்த அணியும் மட்/மமே/கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அணியும் தெரிவாகியதுடன், முதலில் துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட முனைக்காடு பாடசாலைகள் அணி 4 ஓட்டங்களை சேகரித்திருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை அணி 5 ஓட்டங்களை பெற்று ஆசிரியர் தின எல்லே சுற்றுப்போட்டியின் சம்பியனானக தெரிவானது அதனை தொடர்ந்து இடம்பெற்ற அதிபர் அணியுடனான சிறப்பு போட்டியிலும் கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.
Comments
Post a Comment