சர்வதேச கிராமியப் பெண்கள் தினத்தினை முன்னிட்டு கிராமிய மகளீரை கௌரவிக்கும் நிகழ்வு........

 சர்வதேச கிராமியப் பெண்கள் தினத்தினை முன்னிட்டு கிராமிய மகளீரை கௌரவிக்கும் நிகழ்வு........

சர்வதேச கிராமியப் பெண்கள் தினத்தினை முன்னிட்டு கிராமிய மகளீரை கௌரவிக்கும் நிகழ்வென்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் எம்.எல்.எம்.வுஹாரி தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்நிகழ்வு (15) திகதி மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
"அனைவருக்கும் நல்ல உணவினை பயிரிடும் கிராமியப் பெண்கள்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் பாரம்பரிய கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன், ஆர்வத்துடன் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மகளீர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வயது முதிர்ந்த தாய்மார் அதீத ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்ததுடன், இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னால் பெண் பிரதிநிதிகளும், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.













Comments