மட்டு. மாவட்டத்தில் மோட்டர்சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த இருவர் கைது.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேசங்களில் மோட்டர்சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த இருவரை நேற்று புதன்கிழமை (4) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர் மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில் பெண்களை மோட்டார்சைகிளில் இருவர் பின் தொடர்ந்து தங்க சங்கிலிகளை அறுத்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த பிரதேசங்களை சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், நேற்று புதுன்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் செட்டிபாளையம் கோவில் அருகில் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர். அத்துடன், கொள்ளையிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இருவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்இ கலை நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டதுடன் மாணவர்கள் பலருக்கு கற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பிரிவில் சித்தி பெற்ற மாணவர்கள்இ மற்றும் விசேட ஆற்றல்களை வெளிப்படுத்திய சிரேஷ்ட பிரஜைகள் பலர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டதுடன் சிறார்கள் பலர் பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்படமையும் விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன்இ பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார்இ கணக்காளர் தி. அம்பிகாபதிஇ சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் அ.குககுமரன்இ சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ. ஜெயராஜா உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நடாத்திய
Comments
Post a Comment