ஒருபானை அமைப்பால் வவுணதீவு பிரதேசத்தில் உலர் உணவு வழங்கும் நிகழ்வு............
ஒருபானை அமைப்பானது பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இவ் அமைப்பானது இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
மட்டக்களப்பில் வவுணதீவு, கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வறுமைக்கோட்டிற்குள் வாழும் முதியவர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வருவதுடன், மட்டக்களப்பின் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்பவர்களை நகர்ப்பகுதில் விடுதி வசதிகள் வழங்கி வைத்து அவர்களது கல்விக்கு தேவையான உபகரணங்களை வழங்கி, அவர்களது கல்வியினை வளர்க்கும் செயல்பாடுகளுக்கு வைத்திய கலாநிதி அருள்நிதி அவர்களுடன் இணைந்து சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
அண்மையில் மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் பாடசாலைக்கு அவசியமான தளபாடங்கள் திருத்தி அமைத்து வழங்கி இருந்தது.
அதே போன்று கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தினால் நடத்தப்படும் வெளிவாரி பட்டப்படிப்பில் கல்வி கற்கவுள்ள வறிய 5 மாணவர்களுக்கு வட்டியற்ற முறையில் கடன் வழங்க முன்வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று (27) வவுணதீவு பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும், பெண்கள் தலைமை தாங்கும் 10 குடும்பத்திற்கான உலர் உணவு வழங்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் S.சுதாகர் தலைமை தாங்கினார், அத்தோடு உதவி பிதேச செயலாளர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் ஒருபானை தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிரதிநிதியும், Friends of Batticaloa Hospitals UK ஸ்தாபகத்தின் முன்னாள் தலைவரும், சிவானந்தா வித்தியாலய UK கிளையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகருமான அறங்காவலர் வைத்திய கலாநிதி பாலசுப்ரமணியம் அவர்களும் ஒருபானை தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளாக J.சாய் ராஜன் மற்றும் R.முருகதாஸ் ஆகியோரும் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment