கோறளைப்பற்று மத்தி பிரதேச சிறுவர் சபையும் சமுர்த்தி பிரிவும் இணைந்து நடாத்திய சிறுவர் முதியோர் தின நிகழ்வு.....

 கோறளைப்பற்று மத்தி  பிரதேச சிறுவர் சபையும் சமுர்த்தி பிரிவும் இணைந்து நடாத்திய சிறுவர் முதியோர் தின நிகழ்வு.....

ஒக்டோபர் 01 சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு  கோறளைப்பற்று மத்தி  பிரதேச சிறுவர் சபையும், சமுர்த்தி பிரிவும் இணைந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் முதியோர் தினத்தை மிக சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்கள் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர்  எம்.ஏ.சி ரமீசா, எஸ்.ரி.நஜிப்கான், எச்.எம்.றுவைத், மனுஸ் அபுபக்கர், அஜ்மீர், எஸ்.ஏ.எம். பசீர், எம்.தாஹிர்  ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் சிறவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் சிறுவர் தின போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. சிறார்களும் உளவத்துனையும், மகிழ்ச்சியான குடும்பம் என்ற தலைப்பில் உளவளவாளர் மனுஸ் அபுபக்கர் அவர்களினால் சிறப்புரை ஒன்றும் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 















Comments