மண்முனை வடக்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் கைத்தறி உற்பத்தி கிராம திறந்துவைப்பு.....
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நொச்சிமுனை கிராம சக்தி மக்கள் சங்கத்தினரின் கைத்தறி உற்பத்தி கிராம திறப்பு விழா இன்று (24) திகதி நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
"ஒரு கிராமத்திற்கு ஒரு உற்பத்தி இடம்பெறல்" எனும் தொனிப்பொருளில் நொச்சிமுனை பிரிவில் கைத்தொழில் கிராமத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் அப்பகுதியில் ஏற்படும் சமூக சீர்கேடுகளில் இருந்து மக்களையும், இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்து குடிசைக் கைத்தொழிலை மேம்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
கிராம சக்தி மக்கள் சங்க உறுப்பினர்கள் ஏறத்தாழ 20 பேர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இதற்குத் தேவையான பயிற்சிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மூலப்பொருட்களை கிராமிய தொழில் துறை திணைக்களம் வழங்குவதுடன் அவற்றிற்குரிய சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய தொழில் துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் ரிசாணா சாரங்கன் மற்றும் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜெ.கணேசமூர்த்தி அவர்களும் திருவள்ளுவர் சிக்கன கூட்டுறவுச் சங்கம், மகளீர் மேம்பாட்டு அமைப்பு, கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கல்லடி, நொச்சிமுனை, நாவற்குடா கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment