வாழ்வின் சக்தி செயற்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு....
"நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் வாழ்வின் சக்தி செயற்றிட்டத்தின் இரண்டாம் பாகத்தின் 33 வது நாள் இன்றாகும்.
LOLC நிறுவனமும் கம்மெத்தையும் இணைந்து முன்னெடுத்துவரும் வாழ்வின் சக்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மஞ்சந்தொடுவாய் உசானியா வித்தியாலயம், முகைதீன் வித்தியாலயம், காங்கேயனோடை ஹிஸ்புழ்ழாஹ் வித்தியாலயம் மற்றும் ஆரையம்பதி கர்ப்பலா அல் மனார் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளிலும் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இதன் போது கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment