காத்தான்குடிப் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்......

 காத்தான்குடிப் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்......

காத்தான்குடி பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது அனைத்து உத்தியோகத்தர்களும் பிரதான தனிநபர் தொழில் சுட்டியில் குறிப்பிட்டவாறு மூன்றாம் காலாண்டிற்கான செயற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு பிரதேச செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்காதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியாது என்றும், அக்கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்ட 3354 பயனாளிகளில் 3058 பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் 2153 பயனாளிகளுக்கு தற்போது வரை பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. 905 பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு, பணம் வைப்பிலிடப்படுமென சமூக நலன்புரி அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சமூக நலன்புரி நன்மைகள் சபையினால் நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டுக் குழுவினால் மேன்முறையீடுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், கரையோரம் பேணல், மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் தொழில் முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டன.
இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Comments