வவுணதீவு பிரதேச முதியோர் தின நிகழ்வு.............
மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பிரதேசத்திலுள்ள முதியோர் சங்கங்கள் மற்றும் முதியோர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வினை, மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களம் ஒழுங்கு செய்து நடாத்தியது.
நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் கணக்காளர் சுந்தரலிங்கம் சமூக சேவை உத்தியோகத்தர் சிராணி சிவநாயகம் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment