களுவாஞ்சிகுடியில் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு......
நாடளாவிய ரீதியில் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் பல வேலைத்திட்டங்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் பொதுச்சந்தை உட்பட பிரதேச மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் மது ஒழிப்பு தொடர்பான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு நிகழ்வும் (03) நடாத்தப்பட்டது.
Comments
Post a Comment