மட்டக்களப்பில் மோட்டர் போக்குவரத்த திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை......
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை எதிர்வரும் 21ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இவ்விசேட நடமாடும் சேவையில் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் பல நன்மைகள் வழங்கப்படவுள்ளன.
இதுதவிர மேலும் பல வகையான வசதிகள் இந்நடமாடும் சேவையூடாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் உரிமை மாற்றத்திற்காக விண்ணப்பித்து இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்க தீர்வு காணல், பதிவுச் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளல், வாகனங்களை பரிசீலித்து நிறைச்சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்குதல். சகல வாகனங்களுக்கான உரிமை மாற்றல் விண்ணப்பங்களை பொறுப்பேற்றல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் எழுத, வாசிக்க தெரியாத தேர்ச்சி குறைந்த நபர்களுக்காக வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு விசேட பரீட்சையொன்று நடாத்துதல், நீண்டகாலமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாத, ஆவணங்களில் குறைபாடுகளுடன்கூடிய வாகனங்களுக்காக மீண்டும் வருமான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு சிபாரிசுக் கடிதங்கள் வழங்குதல், சிலிண்டர் கொள்ளளவு 50ற்கும் குறைந்த மோட்டார் சைக்கிள்களை (மோபேட்) பதிவு செய்தல், சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளல். விசேட தேவையுடைய நபர்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குத் தேவையான வைத்திய தொழினுட்பக் குழுவின் சிபாரிசுகளை வழங்குதல், மோட்டார் சைக்கிள்களின் தெளிவற்ற செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்களை தேசிய ரீதியாக அச்சிடல் போன்ற சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் பயன்பெறவிரும்பும் பொதுமக்கள் தமது பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகத்தினைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், தேவையான ஆவணங்களை தயார்படுத்திக் கொள்ளவும் முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment