புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிறுவர் தினம், தேசிய மறைபரப்பு தின கலை நிகழ்வுகள்......
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில், சிறுவர் தினம் மற்றும் தேசிய மறைபரப்பு தினம் ஆகியவற்றை சிறப்பிக்கும் முகமாக, சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
ஆலய பங்குத்தந்தை, இயேசுசபை துறவி அனிஸ்டன் மொராயஸ் அடிகளாரின் தலைமையில், ஆலய வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. முதல் நிகழ்வாக பங்கு மக்களால், காலை உணவுகள் மற்றும் சிற்றுண்டி வகைகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன.
தொடர்ந்து ஆலயத்தில் மறைக்கல்வி பயிலும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி இடம்பெற்றது. மாலை நிகழ்வாக, சங்கீதக்கதிரை மற்றும் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல், டொங்போலா ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.
பரிசில்களை அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதர சகோதரிகள் வழங்கி வைத்தனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், மறை ஆசிரியர்கள், அயல் பங்கு மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment