மட்டு சமுர்த்தி முகாமையாளர்களுடன் கணக்காய்வு அத்தியேட்சகர் கலந்துரையாடல்...

  மட்டு சமுர்த்தி முகாமையாளர்களுடன் கணக்காய்வு அத்தியேட்சகர் கலந்துரையாடல்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்களை கணக்காய்வு அத்தியேட்சகர் A.M.மாகீர் அவர்கள் சந்தித்து சமுர்த்தியின் தற்போதைய, கடந்த கால நிலை பற்றி கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல விடயங்களை முகாமையாளர்களுடன் கலந்துரையாடினார். 

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் முகாமையாளர்கள் மற்றும் 14 பிரதேச செயலங்களில் கடமையாற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கிச்சங்க முகாமையாளர்கள், மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுடன் கணக்காய்வு அத்தியேட்சகர் A.M.மாகீர் அவர்கள் கலந்துரையாடினார்.

இதன் போது கடந்த கால செயற்பாடுகள் பற்றியும், இனி வரும் காலங்களில் எவ்வாறு மக்களுக்கு திட்டமிட்டு விரைவாக பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட  கணக்காளரும் சமுர்த்தி பிரிவின் கணக்காளருமான S.M.பசீர் அவர்களும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.





Comments