மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பனம்பொருள் உற்பத்தி பயிற்சி.....

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பனம்பொருள் உற்பத்தி பயிற்சி..... 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், பனம்பொருள் உற்பத்திக்கான பயிற்சி நெறி மட்டக்களப்பு YMCA நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சூழல் தொகுதி, வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்குமான சமூக அடிப்படையிலான உள்வாங்கல் அபிவிருத்தி நடைமுறையில், CBM நிறுவனத்தின் நிதி அனுசரணையில், மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் திட்டத்தின் ஒரு செயற்பாடாக, 'மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவோம், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள் பாவனையை தவிர்த்து அதற்கான மாற்றீட்டுப் பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம் எமது சுற்று சூழலை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு YMCA நிறுவனம், பனை அபிவிருத்தி சபையுடன் இணைந்து, YMCA நிறுவனத்தின் பதில் பொது செயலாளர் பற்றிக் தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பயிற்சி நெறியில் மண்முனை வடக்கு, ஏறாவூர் நகர், ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்ப பெண்கள் கலந்து கொண்டனர்

Comments