உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச விற்பனைக் கண்காட்சி...

 உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச விற்பனைக் கண்காட்சி...

காத்தான்குடி பிரதேச செயலக சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான விற்பனைக் கண்காட்சி (09) திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
இக்கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாதணிகள், இனிப்பு பண்டங்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், ஆடைகள், விதைக் கன்றுகள் போன்ற பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டன.
இதன் போது பிரதேச செயலகத்தின் சகல உத்தியோகத்தர்களும் இதனை பார்வையிட்டதுடன் சிறுகைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களின் உற்பத்திகளைப் பாராட்டி, அவற்றைக் கொள்வனவு செயவதிலும் ஈடுபட்டனர்.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments