கொக்கட்டிச்சோலையில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு.........

 கொக்கட்டிச்சோலையில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு.........

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் புதிய ஆயுர்வேத வைத்திய சாலை பிரதேச மக்களின் தேவை கருதி (19) திகதி திறந்து வைக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை சிகிச்சை வழங்கும் நோக்கில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.சுகுணன் உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகள், பிரதேச மக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
மாவடிமுன்மாரி கிராமிய சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை, இப்பகுதியில் அதிகமாக பொருளாதார ரீதியில் அடிமட்டத்திலுள்ள மக்களே வாழ்ந்து வருகின்றமையினால் அவர்களின் சுகாதாரத் தேவைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments