தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தில் முதன்முறையாக புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம்......
சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள வல்லனி பகுதியில் 4.5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது புனித அன்னை தெரசா ஆலயம்.
தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தில் முதன் முறையாக புனித அன்னை தெரசாவிற்கு கட்டப்பட்டுள்ள புதிய ஆலயம் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் முனைவர்.அந்தோணி பாப்புசாமி அவர்களால் திறக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28 செவ்வாய்க்கிழமை இந்திய இலங்கை நேரம் மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்ட இவ்வாலயமானது சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள வல்லனி பகுதியில் 4.5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை பேராலயத்தின் ஒரு பகுதியான வல்லனியில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று, அப்போதைய சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு சூசை மாணிக்கம் அவர்களால் புனித அன்னை தெரசாவை பாதுகாவலியாகக் கொண்டு, மறைமாவட்ட உதவியுடன் தற்காலிக ஆலயம் ஒன்றுக் கட்டப்பட்டு, தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
தற்காலிக ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், பங்குத்தந்தை அருள்பணி. S.லூர்துராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, முன்னாள் முதன்மை குரு பேரருட்திரு. ஜோசப் லூர்துராஜா மற்றும் மும்மதத் தலைவர்கள் இணைந்து புதிய ஆலயத்திற்கு 15.09.2019 அன்று அடிக்கல் நாட்டினர்.
கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கால் பணிகள் சற்று தொய்வுற்று, தற்போது பணிகள் நிறைவுபெற்ற நிலையில், செப்டம்பர் 28 வியாழன் மாலை புதிய ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்படது.
Comments
Post a Comment