மட்டக்களப்பில் சாதனைப் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு........

 மட்டக்களப்பில் சாதனைப் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு........

தேசிய ரீதியில் சாதனை பெண்களை கௌரவிக்கும் வணிதாபிமான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு NDB வங்கி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன், கடந்த வருடங்களில் இடம் பெற்ற வணிதாபிமான நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றியீட்டிய சாதனை பெண்மணிகளின் அனுபவ பகிர்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து சாதனைப் பெண்களின் புகைப்படங்கள் வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்து, இலங்கை திருநாட்டின் வரைபடத்தில் ஒட்டப்பட்டதுடன், அவர்களினால் கையொப்பமிட்டதுடன், NDB வங்கியினால் பெண்களை கௌரவப்படுத்தும் வண்ணமாக அன்பளிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் NDB வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் உள்ளிட்ட குறித்த கிளையின் உத்தியோகத்தர்களும், கம்மெத்த செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சாதனைப் பெண்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





Comments