சொறிக்கல்முனை திருச்சிலுவை ஆலய சிறுவர்தினம், ஆசிரியர் தின நிகழ்வு......
(டினேஸ்)
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அருட்தந்தை பிறைனர் செலர் அடிகளார் அவர்களும், சொறிக்கல்முனை பங்கின் முன்னை நாள் கன்னியமட தலைவி அருட்சகோதரி டெல்சியா, மற்றும் தற்போதைய கன்னியமட தலைவி அருட்சகோதரி பவித்ரா, ஏனைய அருட்சகோதரிகள், சொறிக்கல்முனை 01 கிராம சேவகர் தேவசிகாமணி, வீரச்சோலை அ.த.க பாடசாலை அதிபர் A. சுதர்சன் அவர்கள், அன்னமலை நாவிதன்வேளி கிராம சேவகர் கவறியல், கிறிக்கேட் பயிற்றுவிப்பாளர் தர்சன், கோலிக்கு ரோஸ் மகா வித்தியாலய உதவி அதிபர் குமாரராசா மற்றும் பங்கு சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டடனர்.
இதன் போது சிறுவர்களின் பல விளையாட்டு நிகழ்வுகளும், மறையாசிரியர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்று ஒவ்வோரு குழுக்களினாலும் அமைக்கப்பெற்ற இல்லங்களை அதிதிகள் பார்வையிட்டதோடு நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும், மறை ஆசிரியர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
Comments
Post a Comment