விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது...........
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு பாடசாலை முன்றலில் (02) வித்தியாலய அதிபர் நவகீதா தர்மசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன, குறிப்பாக அஞ்சல் ஓட்டம், சங்கீதக்கதிரை, மிட்டாய் பொறுக்குதல் போன்ற பலவகையான போட்டிகள் இடம் பெற்றதோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இவ் நிகழ்விற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
Comments
Post a Comment