உன்னிச்சை ஆறாம் மயில்கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு.......

 உன்னிச்சை ஆறாம் மயில்கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு.......

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, உன்னிச்சை ஆறாம் மயில்கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வும், மாணவர்களுக்கான பாடசாலை மைதானம் கையளிக்கும் நிகழ்வும் இன்று (02)  இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் விநாயகமூர்த்தி பிரபாகரன் தலைமையில் மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகளும், மட்டக்களப்பு புனித மிக்கேல்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் புனித மிக்கேல் கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு கல்வி பயின்ற O/L மாணவர்களில் கனடா நாட்டை சேர்ந்த சுரேஷ் கணேசமூர்த்தி அவர்களின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .

இதன் போது மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு நிகழச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கபட்டன.

நிகழ்வில் அருட் தந்தைஅன்னதாஸ், உன்னிச்சை பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்



Comments