நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை......

 நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை......

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை' என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

(16) பிற்பகல் இரண்டு மணியளவில்  இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சுரேஸ்குமார் தனிகை, லோகேஸ்வரன் தமிழினி ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் தோற்றி பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார்  சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments