மட்டக்களப்பில் இலவச கண் பரிசோதனை.....

 மட்டக்களப்பில் இலவச கண் பரிசோதனை.....

மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் மக்களின் நன்மை கருதி இலவச கண் பரிசோதனையும், மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
232 ஆவது காலால் படை பிரிகேட்டினால் இந் நிகழ்வு புலிபாய்ந்தகல் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவு சுகாதார வைத்தியர் அதிகாரி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வானது கிழக்கு மாகாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மதகுருவினால் ஆசிர்வதிக்கப்பட்டு, மாணவர்களின் கலாச்சார ரீதியாக பாரம்பரிய நடனத்துடன் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைத்தனர்.
பின்னர் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. நிகழ்வில் 23 ஆவது காலால் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன 232 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அஜித் புஸ்பகுமார பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் நன்கொடையாளர் ஜோர்ச் குணரட்ன ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Comments