வாழைச்சேனையில் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான விளிப்பூட்டல் நிகழ்வு......
வாழைச்சேனையில் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான விளிப்பூட்டல் நிகழ்வு......
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அதற்கிணங்க முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம் சர்ஜுன் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள சகல முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான சிறுவர்கள் தொடர்பான விளிப்பூட்டல் பயிற்சிப் பட்டறை (10) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது முன் பிள்ளைப் பருவ மற்றும் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு, முன் பிள்ளை விருத்தி, போசாக்கான உணவு, ஆரோக்கிய வாழ்வு, சிறுவர்களின் ஊக்கம் போன்ற பல விடயங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் டபிள்யு.ரி.அருசியா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சபூஸ் பேகம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.நிஹாறா எனப் பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment