மயிலங்கரச்சைக் கிராமத்தில் உளவத்துனை மனப்பாங்கு மாற்றம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு.......

 மயிலங்கரச்சைக் கிராமத்தில் உளவத்துனை மனப்பாங்கு மாற்றம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு.......

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் மயிலங்கரச்சைக் கிராமத்தில் உளவத்துனை மனப்பாங்கு மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வொன்று (20) இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு வளவாளராக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உளவளத்துனை உதவியாளர் விக்னேஷ்வரி பிரதீபன் கலந்து கொண்டு சிறப்பான முறையில் வளவாண்மை மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் ஏ.பி. காதர் முகம்மட், சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாகிகள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Comments