ஓசியன் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில்,ஒன்றுகூடல் நிகழ்வு........

ஓசியன் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில்,ஒன்றுகூடல் நிகழ்வு........

ஓசியன் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கிடையிலான வருடாந்த கல்வி கலாசார ஒன்று கூடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

தன்னார்வ தொண்டு நிறுவனமான ஓசியன் லங்கா நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது .

ஓசியன் லங்கா நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் சாலினி பத்மராஜா ஏற்பாட்டில் ஓசியன் லங்கா நிறுவன பணிப்பாளர் டிலானி பண்டர் தலைமையிலான குழுவுடன் வருகை தந்துள்ள பிரித்தானியாவின் கல்-தோ-பாக் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஓசியன் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் கல்வி பயிலும் மாணவர்களும் ஒன்றுகூடலில் பங்கேற்றனர்.

ஓசியன் லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கல்-தோ-பாக் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

Comments