சாரளம் சஞ்சிகை வெளியீடு...........

 சாரளம் சஞ்சிகை வெளியீடு...........

மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனை ஆரம்பிக்கப்பட்டு 25 வருட பூர்த்தி வெள்ளிவிழாவை முன்னிட்டு, சாரளம் சஞ்சிகை வெளியீட்டு விழா  வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.சிறீதரன் தலைமையில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் ஜீ மஹராஜ் கலந்து கொண்டார்.

சாரளம் சஞ்சிகையின் முதல் பிரதியினை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சிறீதரன், சுவாமி நீலமாதவானந்தர் ஜீ மஹராஜிக்கு வழங்கிவைத்தார்.

நூல் நயவுரையினை ஆசிரியர் திரு.கிருபானந்தம் நிகழ்த்தியதுடன், குறித்த சஞ்சிகையில் கல்வி, சமூகம் சார்ந்த பல்வேறு சிறப்பு கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியன வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் ஓய்வு நிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Comments