மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரி மாணவியின் தவறான முடிவு.....
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெச்சிமுனை பிரதேசத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் (19) இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்னிநகர் பழுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த (21) வயதுடைய மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரி நடனக்கலை மாணவியான ஜெனேந்திரராசா ஜனார்த்தனி என்பவரே தனது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த ஒருவருடமாக மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரியில் நடனக்கலை கற்று வந்த நிலையில் தனது உறவினர் வீட்டில் இருந்து தனது கல்வியினை கற்று வந்ததாகவும் நேற்று தொலைபேசியில் உரையாடிவிட்டு சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அயலில் உள்ள உறவினர் சென்று பார்த்த போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக அமைவாக சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.;.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment