தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.....

 தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.....

தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டி மற்றும் Taekwondo போட்டியிலும் சாதனை படைத்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (12) சிவானந்தா தேசிய  பாடசாலை  ஒன்றுகூடல் வேளையில்  பாடசாலை அதிபரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மல்யுத்த பயிற்றுவிப்பாளர் திரு. திருச்செல்வம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மல்யுத்த போட்டியின் மூலம்:

தங்க பதக்கம்- 01

வெள்ளி பதக்கம் - 02

வெண்கல பதக்கம் - 02

Taekwondo போட்டியின் மூலம்:

வெண்கல பதக்கம் - 01,  என்ற அடிப்படையில்     வெல்லப்பட்டிருந்தன .

    பாடசாலை அதிபர்  அதிபர் திரு.தயாபரன், பிரதி அதிபர் திரு. சுவர்ணேஸ்வரன், திரு.மதிமோகன், உதவி அதிபர் திரு.மணிவண்ணன் வெற்றி பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், எமது பழைய மாணவரும் மல்யுத்த பயிற்றுவிப்பாளருமான திரு. திருசெல்வம், உடற் கல்வி ஆசிரியர்கள், திரு. தினேஷ்குமார், திரு. ராஜபவான், செல்வி. வேமனாதேவி பயிற்று விப்பாளர்கள் திரு. கிஷோத், திரு யசோதனன் ஆகியோர் இவர்களது சாதனை பின் புலமாக இருந்தது   குறிப்பிட்ட தக்கது . 





Comments