மட்டு மிக்கலில் உயர்தர மாணவர்களுக்கான புதிய கணினி ஆய்வுகூடம் திறந்து வைப்பு......

 மட்டு மிக்கலில் உயர்தர மாணவர்களுக்கான புதிய கணினி ஆய்வுகூடம் திறந்து வைப்பு......

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் புதிய கணினி ஆய்வுகூடம்  திறந்து வைக்கப்பட்டது. இதற்காக கல்வி அமைச்சின் நிதி உதவியின் கீழ் 21 கணினிகள்  கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 

இவ் புதிய கணினிகளை பயன்படுத்த தேவையான ஆய்வு கூட அறையை புனரமைப்பதற்கு புனித மிக்கல் கல்லூரியில் கல்வி கற்ற  11A - 1998 பிரிவு A/L மாணவர்களும் 2003 பிரிவு O/L மாணவர்களும் உதவியுள்ளனர்.

1998 பிரிவு O/L மாணவர்கள் மூலம்  500,000 ரூபா பண செலவில் கணினி ஆய்வு கூடத்திற்கு தேவையான மின்சார வசதியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் மற்றும், 2003 பிரிவு A/L மாணவர்கள் 220,000 ரூபா பண செலவில் கணினி ஆய்வு கூடத்திற்கு தேவையான  25 கணினி மேசைகள் கொள்வனவு செய்து வழங்கி இருந்தனர்.

 இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Comments