பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த காத்தான்குடியில் புதிய முயற்சி....

 பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த காத்தான்குடியில் புதிய முயற்சி....

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கூட்டு சகாத் திட்டத்தின் அங்கமாக, வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சியாக ஆடையகம் ஒன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டத்துக்கு முதல் கட்டமாக 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டு சகாத் திட்டத்தின் தொழில் முயற்சியாக ஆடையகத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமியின் ஒருங்கிணைப்பில் சம்மேளனத் தலைவர் ரஊப் ஏ.மஜீட் தலைமையில் நடைபெற்றது.


Comments