களுவாஞ்சிகுடியில் சர்வதேச உளவளத்துணை தினத்தினை முன்னிட்டான உத்தியோகத்தர்களுக்காக பல்வேறு நிகழ்வுகள்.....

 களுவாஞ்சிகுடியில் சர்வதேச உளவளத்துணை தினத்தினை முன்னிட்டான உத்தியோகத்தர்களுக்காக பல்வேறு நிகழ்வுகள்.....

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ம் திகதி சர்வதேச உளநல தினம் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டு, உலக நாடுகளுக்கு இடையில் உளவளம் பேணலின் அவசியம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சிந்தனைகளை மையப்படுத்தியதாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் உளவளத்துணை தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் ஒழுங்குசெய்ய்யப்பட்டு உளவளத்துணை உத்தியோகத்தரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
"அனைவரினதும் உளநலம் மற்றும் நல்வாழ்வை உலக அளவில் முதன்மைப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் அமைந்த இவ் வருட உளவளத்துணை தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 'கலைகள் மற்றும் அரங்க விளையாட்டுகளுடாக ஆற்றுப்படுத்தல்' எனும் தலைப்பிலான மூன்று நாட்களை கொண்ட பயிற்சிபட்டறையானது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சிபட்டறையின் வளவாளர்களாக ம.நிறோசினிதேவி (சமதை பெண்ணிலைவாத நண்பர்கள் குழு), வி.சிந்துஉஷா (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காத்தான்குடி) மற்றும் ப. ராஜதிலகன் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்துகொண்டு மிகவும் சிறப்பான முறையில் இந்த பயிற்சிபட்டறையினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments