மட்டக்களப்பில் சொர்ணாளி இசை கலைஞர்களுக்கு கௌரவம்.....

 மட்டக்களப்பில் சொர்ணாளி இசை கலைஞர்களுக்கு கௌரவம்.....

சொர்ணாளி இசை கலைஞர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு (01) திகதி மட்டக்களப்பில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினுடைய ஏற்பாட்டில் முரசம் பேரிசை கலைகள், கற்கைகள் மன்றம் வழங்கிய சொர்ணாளி இசை விழா 2023 இன்று மட்டக்களப்பு - நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதே மட்டக்களப்பின் முதுசங்களாக திகழும் 7 சொர்ணாளி கலைஞர்களுக்கு கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுடைய பாரம்பரிய கலையினை அடையாளப்படுத்தும் நோக்கில் அழிவடைந்துவரும் நிலையிலுள்ள பாரம்பரிய கலைகளில் ஒன்றான சொர்ணாளி இசை கலைஞர்களை அறிமுகம் செய்து அவர்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக சொர்ணாளி கலைஞர்கள் கொட்டுப்பறை இசை முழங்க வரவேற்கப்பட்டதனைத்தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு, சொர்ணாளி கலைஞர்கள் அறிமுகம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து சொர்ணாளி கலைஞர்கள் ஒவ்வொருவரினாலும் தமது சொர்ணாளி இசை நுட்பம் நிகழ்த்தி காட்டப்பட்டதனைத் தொடர்ந்து, சொர்ணாளி கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் தங்கமுத்து ஜெயசிங்கம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் சி.ஜெயசிங்கம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை நவரெட்ணம் நவாஜி அடிகளார் உள்ளிட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன், நிகழ்வின் இறுதியில் சொர்ணாளி கலைஞர்களின் அனுபவப்பகிர்வுடனான கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.





Comments