மட்டக்களப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால்இ ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைப்பு.....
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில், தகவல் தொழிநுட்ப பயிற்சி ஸ்மார்ட் வகுப்பறை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரட்னவால் திறந்து வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்திலுள்ள ஏனைய பயிற்சி வகுப்புக்களையும் பார்வையிட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகளுடனும் கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.வி.சந்திரத் சந்திரபால, மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் விஜயகலாராணி உட்பட பலரும் உடனிருந்தனர்.
அம்கோர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பயிற்சியில் திறமையை வெளிக்காட்டிய இளைஞர் யுவதிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment