ஆயித்தியமலை - நெல்லூர் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் - இரண்டு வீடுகள் முற்றாக சேதம்......
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட நெல்லூர் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை முற்றாக சேதமாக்கியுள்ளது.
குறித்த கிராமத்திற்குள் (16) திகதி இரவு உட்புகுந்த நான்கு காட்டு யானைகள் கிராமத்தில் உள்ள பயன்தரும் மரங்களை துவம்சம் செய்ததுடன், குறித்த கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளை முற்றாக சேதப்படுத்தியுள்ளதுடன், வீடுகளிற்குள் இருந்த சொத்துக்கள் அனைத்திற்கும் சேதம் விளைவித்துள்ளது.
Comments
Post a Comment