ஐயப்பன் இல்லம் திட்டத்தின் வீடு கையளிப்பு......
ஐயப்பான் வீட்டுத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு வீடு பயனாளியிடம் அன்மையில் கையளிக்கப்பட்டது.
சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களது முழு நிதி பங்களிப்பில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் சமூக செயற்ப்பாட்டாளர் இரா.விஜயகுமாரன் அவர்களது ஒருங்கிணைப்பில் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலளார் கே.தனபாலசுந்தரத்தின் சிபார்சுக்கு அமைவாகவும் அஹிம்சா சமூக நிறுவனத்தின் வழிநடத்தலினால் மிகவும் அழகான வீடு ஐயப்பன் நாமத்தில் நிர்மாணித்து வழங்கப்பட்டது.
மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்க்கு அஹிம்சா சமூக நிறுவனத்தின் தலைவரது தலைமையில் அமைப்புக்களின் தலைவர்கள், ஏறாவூர் பற்று பிரதேச செயலக கணக்காளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொது மக்களது பங்குபற்றுதலுடன் நன்கொடை சான்றிதழ் வழங்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இவ்வீடானது சகல வசதிகளும் கொண்ட வீடாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக அழகிய வீடு, மலசலக்கூடம், குடிநீர் வசதி, வாழ்வாதாரம் (வியாபாரத்திற்கான துவிச்சக்கரவண்டி) வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment